MOST RECENT

|

நாட்டுக் காய்கறி பிரியாணி

தேவையானவை:


கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் (எல்லாம் சேர்த்து)  ஒரு கிலோ


பட்டை                                                                          -  2

லவங்கம்                                                                     -  2

பிரிஞ்சி இலை                                                           -  2

பச்சை மிளகாய்                                                        -  8

 பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி                 -  ஒரு கிலோ

வெங்காயம்                                                                -  400 கிராம்

தக்காளி                                                                        -  400 கிராம்

இஞ்சி, பூண்டு (அரைத்தது)                                  -   100 கிராம்

புதினா                                                                           -  ஒரு கட்டு

கொத்துமல்லி                                                           -  ஒரு கட்டு

தயிர்                                                                              -  ஒரு கப்

தனியா தூள்                                                               -  2 குழிக்கரண்டி


செய்முறை:


* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை நறுக்குங்கள்.


* குக்கரில் எண்ணை விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.


* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.


* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.


* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.


* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.


* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்து இருந்து இறக்கி விடுங்கள்.  அவ்வளவு தான்...நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.


                                                                           *****


                                                  

Posted by ராஜா on 7:59 PM. Filed under , , , , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "நாட்டுக் காய்கறி பிரியாணி"

Leave a reply

Blog Archive

Recently Commented

Recently Added