MOST RECENT

சேமியா பிரியாணி

தேவையானவை:



பட்டை                                                         -    2

லவங்கம்                                                     -   2

பிரிஞ்சி இலை                                          -   2

பச்சை மிளகாய்                                       - 4

தக்காளி                                                       -   6

பெரிய வெங்காயம்                                -   6

சேமியா                                                       -    ஒரு கிலோ

புதினா                                                          -   ஒரு கட்டு

கொத்துமல்லி                                          -   ஒரு கட்டு

இஞ்சி, பூண்டு அரைத்தது                   -  100 கிராம்

தயிர்                                                             -  ஒரு கப்

சோம்பு                                                        -   ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள்                                        -  3 தேக்கரண்டி

தனியா தூள்                                              -   4 தேக்கரண்டி

உப்பு                                                             -   2 தேக்கரண்டி

எண்ணை                                                   -  2 குழிக்கரண்டி


காய்கறிகள் (விருப்பத்திற்கேற்ப கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி போன்றவை)  ஒரு கிலோ


செய்முறை:


* சேமியாவை சிறிது எண்ணை விட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.


* கடாயில் எண்ணை ஊற்றி, சூடேறிய பின் எல்லாப் பொருட்களையும் எடுத்து ஒவ்வொன்றாக வதக்குங்கள்.


* தயிர் சேர்த்து சேமியாவை கிளறுங்கள்.


* ஒரு டம்ளர் சேமியாவிற்கு ஒரு டம்ளர் வெந்நீர் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கிளறுங்கள்.


(மறந்தும் கூட குளிர்ந்த நீரை ஊற்றி விடாதீர்கள்)  இப்போது சேமியா பிரியாணி தயார்.


                                                                       ******

11:45 PM | Posted in , , , , , , , , | Read More »

‘பென்’ பிறந்த கதை

'எழுதுகோல்' என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?
இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

லத்தீன்மொழியின் ‘பென்னாஎன்றால் ‘பறவையின் இறகுஎன்று பொருள். பென்னாஎன்பதே ஆங்கிலத்தில் பென்’ என்றும், தமிழில் பேனாஎன்று மாறியது.
5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனாவழக்கத்துக்கு வந்தது. அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.
1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார். 
ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு நிப்’ செய்தார். நிப்ன் முனையில் இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.
1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது. 

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புஷ்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து. 

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.

5:44 AM | Posted in , , , , , , , | Read More »

Blog Archive

Recently Commented

Recently Added